சினிமா பிட்ஸ்


சிரஞ்சீவி தொடர்ந்து ரீமேக் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறார். மோகன்லால் நடித்த ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ள சிரஞ்சீவி, அதையடுத்து அஜித்தின் ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போகிறாராம்.

அதே வெள்ளை முடியோட நடிப்பீங்களா சார்?

கரோனாவால் பாதிக்கப்பட்டு உரிய உதவி கிடைக்காமல் அல்லாடும் மக்களுக்கு உதவத் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார் நிதி அகர்வால். இயக்குநர் லிங்குசாமியும் கரோனா நோயாளிகளுக்கு உதவ ஆசிரமம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

மத்தவங்க, முதல்வர் நிவாரண நிதிக்காவது பணம் கொடுங்கப்பா...

x