பகத்பாரதி
readers@kamadenu.in
"என் நடிப்பை கவனித்து நான் பண்ற தவறை அத்தனை அழகா சுட்டிக்காட்டும் அப்பாதான் என் முதல் விமர்சகர்" என உற்சாகமாகப் பேசுகிறார் ஷிமோனா மரிய ஜேம்ஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாவம் கணேசன்' தொடரில் நடித்துவரும் அவருடன் ஒரு கலகலப்பான உரையாடல்.
உங்களைப் பற்றி..?
பிறந்து, வளர்ந்தது எல்லாமே கோயம்புத்தூர். இரண்டு அண்ணன்கள். அப்புறம் ஒரு குட்டி தம்பி. குட்டி தம்பின்னு சொல்றது நாங்க வளர்க்கிற நாய்குட்டி. அவன் எங்க குடும்பத்துல ஒருத்தன். நடிக்கப் போறேன்னு சொன்னதும், “எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் எங்களுக்கு ஓகேதான். ஆனா, அந்தத் துறையில் உன்னுடைய பெஸ்டை கண்டிப்பா கொடுக்கணும்”னு வீட்டுல சொன்னாங்க. நான் சூப்பரா பண்ணேன்னு தான் அம்மா எப்பவுமே சொல்லுவாங்க. அப்பாதான் உண்மையா அவருடைய கருத்தைச் சொல்லுவார்.