நானும் இப்போ ஹீரோ!- கதாநாயகனாக கலக்கும் போண்டா மணி


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

வடிவேலு, சந்தானம், யோகி பாபு, பரோட்டா சூரி வரிசையில் நாயகனாகிறார் நகைச்சுவை நடிகர் போண்டா மணி. ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ என்ற படத்தில் முதன்முறையாகப் பிரதான வேடத்தில் நடிக்கும் போண்டா மணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவரிடம் காமதேனுவுக்காகப் பேசினேன்.

ஹீரோவாயிட்டீங்க… எப்படி கிடைத்தது இந்த வாய்ப்பு?

படத்தோட இயக்குநர் பகவதி பாலா ஏற்கெனவே நிறைய சின்ன பட்ஜெட் படங்கள் பண்ணிருக்காரு. தயாரிப்பாளர் தனசேகரும் நிறைய படங்கள் எடுத்தவரு. அவரு திடீர்னு என்னைய வந்து சந்திச்சு டோக்கன் அட்வான்ஸ் கொடுத்தாரு. நான் வழக்கம்போல் ஏதோ நகைச்சுவைக் காட்சிக்குத்தான் நடிக்க கேட்கிறாங்கன்னு நினைச்சேன். அப்புறம்தான், “கதையின் நாயகனே நீங்கதான்”னு சொன்னாரு. 30 வருசமா சினிமாவில் இருக்கேன். இப்போதான் முதன்முதலா ஹீரோவா நடிக்கிறேன். சந்தோஷமா இருக்கு!

x