சஹானா - சக்தி ரியல் லைஃப் ஜோடியா?- ‘இதயத்தை திருடாதே' ஹீமா பிந்து பதில்


பகத்பாரதி
readers@kamadenu.in

“பொட்டிக் வைக்கணுங்குறது என் கனவு... அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என தன்னம்பிக்கை ததும்ப பேச ஆரம்பித்தார், ஹீமா பிந்து. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘இதயத்தை திருடாதே' தொடரில் நாயகியாக நடித்துவரும் அவரிடம் சின்னதாய் ஒரு உரையாடல்.

 உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்...

சொந்த ஊர் ஆந்திராவாக இருந்தாலும் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். நான் ஒரே பொண்ணுங்கிறதால அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பயங்கர செல்லம். அப்பா சினிமாவில் காஸ்டிங் டைரக்டராக இருந்தாலும் வீட்ல படிப்புதான் முக்கியம்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க. பி.காம் படிச்சேன். பொட்டிக் வைக்கிற ஆசையில டிகிரி முடிச்சதும் ஃபேஷன் டிசைனிங் படிச்சேன்.

x