பிட்லீ
readers@kamadenu.in
மலர் டீச்சராக மலையாளத்தில் அறிமுகமாகி ரவுடி பேபியாக தமிழில் ஆட்டம்போட்டு, தெலுங்கு சினிமாவிலும் பிரபலமாக இருக்கும் சாய் பல்லவி அடுத்து ஹிந்திக்குப் போகிறார். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் - ஸ்ரேயா நடிப்பில் 2006 வெளிவந்த ‘சத்ரபதி’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. அந்தப் படத்தில் நடிக்க சாய் பல்லவிக்கு அழைப்பு வந்திருக்கிறதாம்.
நம்ம ஊரை மறந்துடாதீங்க பேபி...
உலகப்புகழ் பெற்ற கோல்டன் குளோப் விருது கமிட்டியில் கடந்த 19 வருடங்களாக ஒரு கறுப்பினத்தவருக்குக்கூட பொறுப்பு தரப்படவில்லை. இதனால், கோல்டன் குளோப் அமைப்பு நிறவெறியுடன் செயல்படுகிறது என்று கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட மூன்று கோல்டன் குளோப் விருதுகளைத் திருப்பிக் கொடுத்து தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்.