பகத்பாரதி
readers@kamadenu.in
“வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுப்பேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை” புன்னகைத்தவாறே சொல்கிறார், டெல்னா. ‘குரங்கு பொம்மை' உட்பட சில தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் இவர், சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் ‘அன்பே வா' தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருடன் பேசியதிலிருந்து...
உங்களைப் பற்றி..?
சொந்த ஊர் கேரளத்தின் திரிச்சூர். அப்பா பிசினஸ் பண்றாங்க. அம்மா ஹோம் மேக்கர். வீட்ல நானும், என் தங்கச்சியும்தான். பரதம், குச்சுப்புடின்னு கிளாசிக்கல் டான்ஸ் தெரியும். சின்ன வயசுல இருந்து பல மேடைகளில் ஆடி விருதுகள் வாங்கியிருக்கேன்.