சினிமா பிட்ஸ்


பிட்லீ
readers@kamadenu.in

‘மிட்நைட் ரன்னர்ஸ்’ என்ற கொரியன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ஷாகினி தாகினி’யில் நடிக்கிறார் ரெஜினா கசாண்ட்ரா.  படத்தில் ரெஜினாவுக்கு காவல்துறை அதிகாரி வேடமாம். நிவேதா தாமஸும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

ரெஜினாதான் ஷாகினியா?

2019-ம் ஆண்டு வெளியாகி உலக அளவில் பலகோடி ரசிகர்களைப் பெற்றது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் ‘விட்ச்சர்’ தொடர். 2020-ல், அத்தொடரின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரோனா பெருந்தொற்று காரணமாக அது தள்ளிப்போனது. தற்போது ஒருவழியாக இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த ஆண்டே இரண்டாம் பாகம் வெளிவர அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

x