இயக்குநர் க்ளோயி ஸாவ்: ஆசியாவின் முதல் ஆஸ்கர் மங்கை


க.விக்னேஷ்வரன்
vigneshwritez@gmail.com

கரோனா பெருந்தொற்றின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்துள்ளது 93-வது ஆஸ்கர் விருது விழா. டேவிட் ஃபின்ச்சர் இயக்கிய ‘மேங்க்’ திரைப்படம்தான் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ‘நோமாட்லேண்ட்’ திரைப்படம் சிறந்த திரைப்படமாகவும், அப்படத்தின் இயக்குநர் க்ளோயி ஸாவ் சிறந்த இயக்குநராகவும் தேர்ந்தெடுப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இதன் மூலம் ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெறும் இரண்டாவது பெண்மணியாகவும், ஆசியக் கண்டத்திலிருந்து சிறந்த இயக்குநருக்கான விருது பெறும் முதல் பெண்மணியாகவும் க்ளோயி சாதனை படைத்துள்ளார்.

யார் இந்த க்ளோயி ஸாவ்?

x