பகத் பாரதி
readers@kamadenu.in
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘என்றென்றும் புன்னகை' தொடரில் நடிப்பவர், சசிகலா. தொகுப்பாளினியாக அறிமுகமாகி நடிகையாக கலக்கிக் கொண்டிப்பவர் பேட்டி என்றாலும் அழகாய் பேசுகிறார். அவரது அழகுப் பேச்சிலிருந்து...
‘என்றென்றும் புன்னகை' தொடரில் நடிப்பது எப்படி இருக்கிறது?
எஃப்.எம். ஸ்டேஷன்ல வேலை பார்ப்பது மாதிரியான கதை என்பதால் இந்த சீரியல் என்னோட பர்சனல் ஃபேவரைட். பொதுவா, எஃப். எம் ஸ்டேஷன்ல எப்படி ஜாலியா வேலை பார்ப்பாங்களோ அப்படித்தான் ஷாட்ஸ் எடுப்பாங்க. ஷூட் இல்லாத போதும் நாங்க அப்படித்தான் ஜாலியா அரட்டை அடிச்சிட்டு இருப்போம். செட்ல எல்லோருமே எந்தவித ஈகோவும் இல்லாமல் ஜாலியா பழகுவாங்க. என் கூட நடிக்கிற இந்திரனும் நானும் மாமா, மச்சான் மாதிரி பழகுவோம்.