சினிமா பிட்ஸ்


பிட்லீ
readers@kamadenu.in

மும்பை திரைப்பட விழாவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் தீபிகா படுகோன்.  2019-ல் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், “தற்போது என்னுடைய தனிப்பட்ட வேலைச் சூழல் காரணமாக என்னால் முழு பங்களிப்பை அளிக்க முடியாது என்பதால் இப்பதவியிலிருந்து விலகுகிறேன்” என்று வெளிப்படையாக அறிக்கை தந்திருக்கிறார்.

அழகான நிர்வாகியை இழக்கிறதே விழாக்குழு..!

‘அந்நியன்’ திரைப்படத்தின் உரிமை என்னிடம் இருக்கிறது. என்னைக் கேட்காமல் அதை ஹிந்தி ரீமேக் செய்வது சட்டப்படி குற்றம் என்று ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஷங்கருக்கு நோட்டிஸ் அனுப்பிய பரபரப்பு அடங்கு வதற்குள், ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படங்களை இயக்கப் போகக்கூடாது என்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறது அந்தப் படக் கம்பெனி. கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தில் மும்மரமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

x