இனி எனது திறமையைக் காட்டுவேன்!- யாஷிகா ஆனந்த் பேட்டி


ரசிகா
readers@kamadenu.in

விதவிதமான ஆடைகள், ரக ரகமான போஸ்கள் என போட்டோ ஷூட் புகைப்படங்களை தினம் தினம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தூவி, மில்லியன்களில் இளசுகளை தன்வசப்படுத்தியிருக்கிறார் யாஷிகா ஆனந்த். கோலிவுட்டின் கிளாமர் குயின், முரட்டு சிங்கிள் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் யாஷிகாவிடம் எத்தனை சர்ச்சையான கேள்விகளைக் கேட்டாலும் பக்குவமாகவும் சமூக அக்கறையுடனும் பதில்கள் வந்து விழுகின்றன. பத்து படங்களை நெருங்கிவிட்ட யாஷிகாவுக்கு, தற்போது பெண் மையப்படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு ‘சல்பர்’ படத்தின் மூலம் வந்திருக்கிறது. அந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருந்தவரிடம் அலைபேசி வழியாக உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.  
    
யாஷிகா என்றாலே சர்ச்சை தானா?

எதையும் நேர்மையாகவும் ஓபனாகவும் பேசினால் அதை சர்ச்சை என்றுதான் பார்க்க வேண்டுமா?  “போலியாக, பொய்யாகப் பேசி, ஒருநாள் உண்மை வெளிப்படும்போது நமது கேரக்டர் உடைந்து நொறுங்கிவிடும். நல்லதோ, கெட்டதோ எப்போதும் உண்மையை மட்டும் பேசு, எந்தக் காலத்திலும் பெற்றோரிடம் பொய் சொல்லாதே. நிம்மதியாக உனக்கு தூக்கம் வரும்” என்று ஒன்றாம் வகுப்பிலிருந்தே அம்மா எனக்கு ஊட்டி வளர்த்திருக்கிறார். அம்மாவின் அந்த கட்ஸ்தான் என்னை இத்தனை துணிச்சலான பெண்ணாக வளர்த்திருக்கிறது. நானொரு ஃபிலிம் ஆர்டிஸ்ட், மாடல் என்பதால் சமூகமும் எனது ரசிகர்களும் நெருக்கமாக என்னைக் கவனிக்கிறார்கள். அவர்களுக்கு நான் உண்மையாக இருந்தாக வேண்டும். அதனால்தான் எதையும் உடைத்துப் பேசுகிறேன்; வெளிப்படையாக இருக்கிறேன். அது பல நேரங்களில் டாக் ஆகிறது; அவ்வளவுதான்!
    
சென்னையில் நீங்கள் பெரும்பாலும் புல்லட்டில்தான் சுற்றுவீர்களாமே?

ஜிம்முக்கு என்னுடைய புல்லட்டில்தான் செல்வேன். கார் எடுக்க மாட்டேன். ஆனால், ஹெல்மெட் போடாமல் ஓட்டமாட்டேன். நமது முகம் தெரிகிறதோ இல்லையோ வயசுப் பசங்க பக்கத்தில் வந்து பைக்கை என் மீது மோதுவது போல் ஆட்டி என்னை பயமுறுத்துவார்கள். நான் அனைவருக்கும் சொல்வது, பெண்கள் பைக்கோ புல்லட்டோ ஓட்டுவது ஒன்றும் உலக அதிசயம் இல்லை. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே நான் புல்லட் ஓட்ட ஆசைப்பட்டேன். ஆனால் அப்பா, “18 வயது ஆனதும் லைசென்ஸ் எடுத்த பிறகு தாராளமாக ஓட்டலாம்” என்றார். இப்படித்தான் எனது புல்லட் கனவை வென்றெடுத்தேன்.
    
‘மூக்குத்தி அம்மன்’ படத்தில், யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டி பக்தி வியாபாரம் செய்யும் போலிச் சாமியார் கதாபாத்திரத்தின் வசீகரத்தால் உந்தப்பட்டு, அவரை நம்பும் நடிகையாக ஒரு காட்சியில் வந்தீர்கள். அதுபோன்ற சாமியார்கள் பற்றி உங்கள் கருத்தென்ன?

x