‘பிக் பாஸ் ஜோடி’யில் நான்- ‘முரட்டு சிங்கிள்ஸ்’ கேப்ரியல்லா பேட்டி


மஹா
readers@kamadenu.in

விஜய் டிவியில் ‘முரட்டு சிங்கிள்ஸ்’ ரியாலிடி ஷோவின் நடுவராக அசத்தி வரும் கேப்ரியல்லா, அடுத்து ‘பிக் பாஸ் ஜோடி’ நிகழ்ச்சியிலும் தடம் பதிக்க ஆயத்தமாகி வருகிறார்.

‘‘இயல்பிலேயே நான் ஒரு டான்ஸர். என்னோட டெய்லி வொர்க் அவுட்ல முக்கிய அங்கமே டான்ஸ்தான். அதை அடிப்படையாக் கொண்ட ஒரு நிகழ்ச்சியில் குதிக்கப் போகிறேன். இதைவிட வேற சந்தோஷம் என்ன இருக்கப்போகிறது!’’ என்று குதூகலிக்கிறார், கேப்ரியல்லா. தொடர்ந்து அவருடன் பேசியதிலிருந்து...

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா, சீரியல் என இறங்காமல் ‘முரட்டு சிங்கிள்ஸ்’ நிகழ்ச்சி வழியே நடுவராக களம் இறங்கிவிட்டீர்களே..?

x