இன்ஸ்டாவில் இழுத்தடிக்கும் பிரபலங்கள்!- சிக்கித் தவிக்கும் சிறு வியாபாரிகள்


கவி
readers@kamadenu.in

பண்டைய காலத்தில் பண்டமாற்றில் தொடங்கிய வியாபார முறை, பல்வேறு வடிவங்களைக் கடந்து நவீன உலகில் ஆன்லைன் வர்த்தக வடிவை அடைந்திருக்கிறது. ஆன்லைன் வர்த்தகம் என்பதும் தற்போது அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இணைய வர்த்தக தளங்களைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் பரிணாமம் அடைந்துள்ளது. பெரும் வர்த்தகத் தளங்களில் பொருட்களை விற்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஆனால், சமூக வலைதளங்களில் அந்தக் கெடுபிடி இல்லை. வாடிக்கையாளர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளவும், தங்களுடைய பொருட்களை இலவசமாகச் சந்தைப்படுத்தவும் அவை ஏதுவாக இருக்கின்றன. இது சிறு தொழில்முனைவோருக்குச் சாதகமாக இருக்கிறது.

ஆனால், வியாபாரம் என்றால் விளம்பரம் அவசியம் அல்லவா? சமூக வலைதளங்களில் அதற்கான வசதியும் இருக்கிறது. குறிப்பிட்ட தொகைக்கு ஏற்றவாறு பொருட்களைக் குறிப்பிட்ட வாடிக்கையாளர் கூட்டத்திடம் விளம்பரப்படுத்த வியாபாரிகளுக்கு அது கைகொடுக்கிறது. பிரபலங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அந்த வழிமுறைதான் தற்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

மீறப்படும் ஒப்பந்தங்கள்

x