தாதா விருதுபெறும் பாபா!- தமிழ்த் திரையை வளர்த்த ரஜினிக்கு அங்கீகாரம்


சந்தனார்
readers@kamadenu.in

2019-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிக்கு அறிவிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு தரப்பிலிருந்தும் மகிழ்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது. தேசிய அளவிலும், பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் வரை ரஜினியை வாழ்த்து மழையில் நனையச் செய்துவருகிறார்கள்.

கூடவே, பெரும் வணிக மதிப்பு கொண்ட ஜனரஞ்சக நடிகரான ரஜினி, இதற்கு முன்னர் தமிழகத்திலிருந்து இந்த விருதைப் பெற்ற சிவாஜி கணேசன், கே.பாலசந்தர் ஆகியோரின் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறித்து சிலர் வியக்கவும் செய்கிறார்கள். தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கும் சமயத்தில் இந்த விருது அறிவிப்பு வெளியாகி யிருப்பதன் பின்னணியில் அரசியல் காரணிகளும் பொருத்திப் பார்க்கப்பட்டு அலசப்படு கின்றன. ஆனால், ஜனரஞ்சக நடிகர், அரசியல் ரீதியாக அவரது ரசிகர்களைக் கவர்ந்திழுக்கவே விருதுகளால் அலங்கரிக்கப்படும் நட்சத்திரம் என்ற அளவில் மட்டும் ரஜினியைப் பார்க்க முடியுமா என்ன?

திரைத் துறையை வளர்த்தவர்

x