தேர்தலில் போட்டியிடும் கனவும் எனக்குள் உள்ளது!- சுகன்யாவின் அரசியல் விருப்பம்


மஹா
readers@kamadenu.in

தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர் என வட்டமடித்து வரும் சுகன்யா, ஜெயா ப்ளஸ் சேனலில் அரசியல் கள ஆய்வு நிகழ்ச்சிகளையும் அசத்தி வருகிறார். அவ்வபோது சினிமாவிலும் முகம் காட்டிவருபவர், ஒரே மூச்சில் மூன்று படங்களில் நடிக்க கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். அவருடன் ஓர் உரையாடல்...

இதழியல் பயின்ற நீங்கள் அரசியல் சார்ந்த செய்தி வாசிப்பில் பரபரப்பாக இயங்கி வருகிறீர்கள் போல?

ஆமாம். பயனுள்ள நிகழ்ச்சிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மீடியா துறையைச் தேர்வு செய்தேன். அதிலும் தேர்தல் நேரத்தில் சும்மா இருக்கலாமா? அதுதான் அரசியல் நிகழ்ச்சிகளை விதவிதமான பார்வைகளில் அளித்து வருகிறேன். செய்தி வாசிப்பாளராகவும் வேலை செய்கிறேன். நேரம் கிடைக்கும்போது யூடியூப் சேனல்கள் வழியாகவும் அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறேன்.

x