பகத்பாரதி
readers@kamadenu.in
எதிர்பாராமல் கிடைத்த நடிப்பு பயணத்தை இறுகப் பற்றிக் கொண்டவர் நடிகை திவ்யா. சீரியல், சினிமா என பிஸியாக வலம் வரும் இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிக்கிறார். அவருடன் ஒரு கலகலப்பான நேர்காணல்.
வக்கீல் ஆகணும்னு ஆசைப்பட்டவர் நடிகையாக மாறியது எப்படி?
அப்பா வக்கீல். சின்ன வயசுல இருந்தே அப்பா மாதிரி வக்கீல் ஆகணும்னு ஆசை. அதனால பி.ஏ., முடிச்சதும் பி.எல்., படிக்க சென்னைக்கு வந்தேன். அக்கா வீட்லதான் தங்கி இருந்தேன். அங்க என்னைப் பார்த்துட்டு அக்காவோட ஃப்ரெண்டு ஒருத்தங்க குறும்படத்துல நடிக்கிறியானு கேட்டாங்க. அந்தக் குறும்படம் மூலமா வீஜே வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் அங்க இருந்து சீரியலுக்கு வந்துட்டேன். இதுதான், எந்தத் திட்டமும் இல்லாமல் நான் நடிகையான வரலாறு.
‘பாக்கியலட்சுமி’ சீரியல் டீம் பற்றி..?