ஓ.டி.டி. உலா: திகட்டாத தீனி


எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

இணையத்தில் ஆர்ப்பாட்டமின்றி வெளியாகி கணிசமான ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் திரைப்படம் ‘தீனி’. தெலுங்கில் ‘நின்னிலா நின்னிலா’வாகவும், தமிழில் ‘தீனி’யாகவும் பிப்ரவரி இறுதியில் ‘ஜீ 5 சினி பிளக்ஸில்’ வெளியான இத்திரைப்படம், இப்போது ‘ஜீ 5’ தளத்தில் காணக்கிடைக்கிறது. புகழ்பெற்ற இயக்குநர் ஐ.வி.சசியின் மகன் ஆனி ஐ.வி.சசி இயக்கிய படம் இது.

உணவகப் பின்னணியில் ஒரு கதை

பானை வயிறு, தலையிலும் முகத்திலும் மண்டிய கேசம் என வித்தியாசத் தோற்றத்திலான தேவ் என்ற இளைஞனின் அறிமுகத்துடன், லண்டன் பின்னணியில் கதை தொடங்குகிறது. தூக்கமின்மை, கட்டுப்பாடற்ற தசைகளின் தடுமாற்றமான ‘மஸில் பிளாசம்ஸ்’ பாதிப்பு என தேவின் அன்றாடங்கள் சங்கடமாய் கழிகின்றன. சமையல் கலைஞராய் அவன் பணியேற்கும் உணவகத்தில் சக சமையல் கலைஞரான தாரா என்ற இறுக்கமான பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது.

x