விஜய்தானே விஜய்சேதுபதிக்கு வில்லன்!-  அக்‌ஷரா கவுடா அசத்தல் பேட்டி


மகராசன் மோகன்
mohan.m@hindutamil.co.in

‘‘சின்னச் சின்ன இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிப்பது, ஒவ்வொரு முறை பயணத்தையும் முடித்துக்கொண்டு திரும்ப நம் சொந்த வீட்டுக்கு திரும்புவது போலத்தான் இருக்கிறது!’’ அழகாய் பேசுகிறார் அக்‌ஷரா கவுடா. ‘ஆரம்பம்’, ‘போகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்த அக்‌ஷரா கவுடா, தமிழில் அடுத்து ‘சூர்ப்பனகை’, ‘இடியட்’ ஆகிய படங்களின் வழியே கவனிக்கவைக்க வருகிறார். தொடர்ந்து அவருடன் உரையாடியதிலிருந்து...

அக்‌ஷரா கவுடா இரண்டு நாயகிகள் படங்களிலேயே தொடர்ந்து கமிட் ஆவது ஏன்?

எனக்கு மெயின் லீட், செகண்ட் லீட் பேச்சுகளில் எல்லாம் உடன்பாடில்லை. என் கேரியரை நான் அந்தமாதிரி திட்டமிட்டுக்கொள்ளவும் இல்லை. ஒரு கதை எனக்கு வரும்போது முதலில் அதில் எனக்கு என்ன வேலை என்பதைத்தான் இயக்குநரிடம் கேட்பேன். அதன் பிறகு தான் தயாரிப்பாளர், ஹீரோ உள்ளிட்ட நடிகர், நடிகைகள் யார் யாரெனக் கேட்பேன். அடுத்தடுத்து வெளிவர உள்ள ‘சூர்ப்பனகை’ படத்தில் உடன் மற்றுமொரு நாயகியாக ரெஜினா இருக்காங்க. ‘இடியட்’ படத்தில் நிக்கி கல்ரானி இருக்காங்க. ஒவ்வொருவரும் அவரவர் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறோம்; அவ்வளவுதான்.

x