எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
1988-ல் வெளியாகி வசூலில் வாரிக் குவித்த ஹாலிவுட் திரைப்படம், ‘கமிங் டு அமெரிக்கா’. 33 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாவது பாகமான, ‘கமிங் 2 அமெரிக்கா’ அமேசான் பிரைம் வீடியோவில் தற்போது வெளியாகியுள்ளது.
முதல் பயணம்
ஆப்பிரிக்கக் கற்பனை தேசமான ஸமுண்டாவின் பட்டத்து இளவரசர் அகீம். ஸமுண்டா செழிப்பாக இருந்தபோதும் பிற்போக்குத்தனம் அதிகம் பீடித்த தேசம். எனவே, பெற்றோர் பரிந்துரைக்கும் பெண்களை நிராகரிக்கும் அகீம், சுதந்திரமாக முடிவெடுக்கக்கூடிய, தனித் தன்மை வாய்ந்த பெண்ணைத் தேடி அமெரிக்கா செல்கிறார். அங்கு தனது அடையாளங்களை மறைத்துக்கொண்டு வலம்வரும் அகீம், லிஸா என்ற பெண்ணைக் காண்கிறார். கண்டவுடன் காதலில் விழுகிறார். படிப்படியாக அவள் மனதை வெல்கிறார்.