சினிமா பிட்ஸ்


பிட்லீ

பாலிவுட்டுக்குப் போகும் விஜய்சேதுபதி, ‘லால் சிங் சத்தா' என்ற ஹிந்தி திரைப்படத்தில் அமீர்கானுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது அல்லவா? கால்ஷீட் தர முடியாததால், அந்தப் படத்தில் இருந்தே விலகிவிட்டார் சேதுபதி. அவரது கதாபாத்திரத்தில் நடிக்க நாக சைத்தன்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது படக்குழு.

நீங்க இங்கேயே இருந்திடுங்க சேதுபதி...

தமிழ் திரையுலகுக்கு வருகிறார் இன்னொரு இந்திய அழகி. 2018-ம்ஆண்டு ‘மிஸ் இந்தியா வேர்ல்ட்’ பட்டத்தை வென்ற அனுகீர்த்தி, பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். சிறு சிறு பட வாய்ப்புகள் மட்டுமே வந்து கொண்டிருந்த அனுகீர்த்தி, இப்போது ஜாக்பாட் அடித்த குஷியில் இருக்கிறார்.

x