மஹா
readers@kamadenu.in
விஜய் டிவியில் ‘செந்தூரப்பூவே’ மெகாத் தொடர், ‘குக் வித் கோமாளி’ காமெடி நிகழ்ச்சி என அசத்தும் தர்ஷா குப்தாவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சங்களில் ஃபாலோயர்கள். சின்னத்திரையில் நாயகி, வில்லி என இரண்டு அவதாரங்களையும் ஏற்று நடித்து வரும் குப்தா, தற்போது ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் இன்னும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது. அவருடனான கலகலப்பான உரையாடலின் ஒரு பகுதி இங்கே...
‘குக் வித் கோமாளி’ காமெடி நிகழ்ச்சி உங்களது திரைப் பயணத்தில் ஒரு மைல்கல் என்று சொல்லலாமா?
நிச்சயமா. அந்த நிகழ்ச்சிக்குள்ள நான் போகும்போது இந்த அளவுக்கு ரீச் கிடைக்கும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. சினிமா, சீரியல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறோம்; அடுத்து ஒரு கலகலப்பான ரியாலிடி நிகழ்ச்சி என நினைத்துக்கொண்டுதான் போனேன். ஆனால், பயங்கர அடையாளம் கொடுத்ததில் எனக்கே ஆச்சர்யம்தான். விஜய் டிவிக்குத்தான் நன்றி சொல்லணும்.