ரசிகா
readers@kamadenu.in
‘தெறி’ படத்தில் சமந்தாவின் தங்கையாக வந்து தமிழ் ரசிகர்களை வசீகரித்த ஐரா, அழகான தமிழ் உச்சரிப்பு, அசத்தலான நடிப்பு என வலம் வரத் தொடங்கியிருக்கிறார். டோலிவுட்டின் புதிய அலை சினிமா என வர்ணிக்கப்பட்ட ‘கேர் ஆஃப் கஞ்சரபலேம்’ தெலுங்குப் படத்தின் தமிழ் மறு ஆக்கமான ‘கேர் ஆஃப் காதல்’ படத்தில், சிறந்த நடிப்புக்காக விமர்சகர்களால் பாராட்டப்பட்டார் ஐரா. தற்போது நல்ல கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் அவரிடம், காமதேனுவுக்காக உரையாடினோம்.
நீங்கள் சென்னைப் பெண்ணா?
அச்சு அசலாக நான் சென்னைப் பெண்தான். ஷெனாய் நகரில் பிறந்து வளர்ந்தேன். பிறகு சைதாப்பேட்டைக்கு இடம் பெயர்ந்தோம். பள்ளி இறுதி வகுப்பு முடித்த பிறகு தான் டி.நகருக்குக் குடிபெயர்ந்தோம். படித்தது டி.நகர் எஸ்.பி.ஜெயின் ஸ்கூல். எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலெக்ட்ரானிக் மீடியா முடித்தேன்.