பெண்கள் குண்டாக இருப்பதும் அழகுதான்!- சாக்‌ஷி அகர்வால் பேட்டி


ரசிகா
readers@kamadenu.in

பிரபுதேவாவுடன் ‘பஹிரா’, சுந்தர்.சியுடன் ‘அரண்மனை 3’, சமுத்திரக்கனியுடன் ‘நான் கடவுள் இல்லை’ என பிஸியாக இருக்கிறார் சாக்‌ஷி அகர்வால். உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள தினமும் கருத்தாய் உடற்பயிற்சி செய்வதில் இவர் ஒல்லி கில்லி. சமீபத்தில், ஆதரவற்ற  குழந்தைகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சாக்‌ஷியுடன் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உரையாடினோம்...

பெண்கள், தங்கள் உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஃபிட்டாகவும் வைத்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்று நினைக்கிறீர்கள்?

பெண்களுக்கு, ஃபிஸிக்கல் ஃபிட்னெஸ் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் மென்டல் ஃபிட்னெஸ். அதைப்பற்றி நம்மில் யாருமே யோசிப்பது கிடையாது. மென்டல் ஃபிட்னெஸ் இருந்தால், ஃபிஸிக்கல் பிட்னெஸ் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்குத் தானாகவே வந்துவிடும். அதேபோல் சைஸ் ஸீரோவாக இருந்தால்தான் ஃபிஸிக்கல் ஃபிட்னெஸ் என்று நிறைய பெண்கள் நினைத்துக் கொள்கிறார்கள். குண்டாக இருப்பதும் அழகுதான். ஆனால், அதில் எவ்வளவு ஸ்டாமினாவுடன் இருக்கிறோம் என்பதுதான் விஷயமே. 80 சதவீதம் நாம் என்ன சாப்பிடுகிறோம் 20 சதவீதம் நாம் என்ன உடற்பயிற்சி செய்கிறோம் என்பதைப் பொறுத்தே, ஒவ்வொருவருக்கும் ஃபிஸிக்கல் ஃபிட்னெஸ் கிடைக்கிறது.

x