மஹா
readers@kamadenu.in
சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்துவைத்திருக்கிறார், ‘சன் மியூசிக்’ தொகுப்பாளினி சஷ்டிகா ராஜேந்திரன். ‘‘கலகலப்பான தொகுப்பாளினின்னு பெயர் வாங்கிட்டேன். சினிமாவிலும் ஒரு நல்ல இடத்தைப் பிடிக்கணும். இப்போதைக்கு இதுதான் என் லட்சியம்” என்கிறார் சஷ்டிகா. அவருடன் ஒரு பேட்டி...
நிகழ்ச்சித் தொகுப்பாளினிக்கும், சினிமா நடிப்புக்கும் என்ன வித்தியாசத்தை உணர்ந்தீர்கள்?
பெரிதாக எதுவும் இல்லை! இரண்டிலும் கேமராவுக்கு முன் நிற்கும் அதே சந்தோஷம்தான். சின்னத்திரையில் ரெகுலராக ஒரே மாதிரி வேலை இருக்கும். சினிமாவில் கேரக்டருக்குத் தகுந்த மாதிரி வித்தியாசத்தைக் காட்டணும். அந்தச் சவாலை சரியாகப் புரிஞ்சிக்கிட்டா சாதிக்கலாம்!