சினிமா பிட்ஸ்


பிட்லீ
readers@kamadenu.in

உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் ஆண்ட்ரியாவுக்கு நிகர் அவர்தான். தனது சிக்கென்ற உடலமைப்பைக் காட்டுவதற்காக, அடிக்கடி இன்ஸ்டாவில், சிங்கிள் பீஸ் உடையணிந்த படங்களைப் பதிவிடுவார். சமீபத்தில் ரத்தச் சிவப்பு உடையில் அவர் வெளியிட்டிருக்கும் படத்துக்கு ஏக வரவேற்பு. மாஸ்டரைத் தொடர்ந்து மிஷ்கினின் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.

அழகிய பிசாசு...

2013-ல் ‘கரிகாலன்’ வரலாற்றுப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் விக்ரம். அதிக பட்ஜெட், விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்யத் தேவைப்படும் காலம் போன்ற காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. பின்னர், ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் ‘சூர்யபுத்ர மகாவீர் கர்ணா’ படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இதுவும் ரூ.300 கோடியில் உருவாக இருக்கும் படம். ஆனால், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்திய கரிகாலனாக நடிப்பதால் இதற்கு கால்ஷீட் ஒதுக்க முடியாது என்று கர்ணா படத்திலிருந்தே விலகிவிட்டார் விக்ரம்.

x