ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in
மூலை முடுக்கில் இருக்கும் சினிமா காதலர்களையும் சென்னைக்கு ஈர்க்கும் பெருவிழா, சென்னை சர்வதேச திரைப்பட விழா. உலக நாடுகளின் ஆகச்சிறந்தத் திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்துக் கோத்துத் திரை மாலையாக ரசிகர்களுக்கு அணிவிக்கும் பெருமுயற்சி இது.
வழக்கமாக டிசம்பரில் நடைபெறும் இவ்விழா, கரோனா காலம் கொடுத்த இடர்ப்பாடுகளால் தள்ளிப்போனது. விடாமல் எதிர்நீச்சல் போட்டு 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை, பிப்ரவரி 18-ம் தேதி தொடங்கியிருக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக, இவ்விழாவில் திரை முத்துகளைக் கண்டு காட்சி மொழியைப் பயின்று கொண்டிருக்கும் வழமையை கரோனாவுக்கு அஞ்சி கைவிடமுடியுமா! நாமும் திரைத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, முதல் சிறப்புத் திரைப்படத்தைக் காண சத்யம் திரையரங்கில் இருந்தோம்.
திரையிலும் பாலின சமத்துவம்!