ஓ.டி.டி. உலா: நிஜமாகவே வந்து ஆட்டம் காட்டும் பேய்!


எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

திகிலூட்டும் அமானுஷ்ய படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. திகிலுடன், நகைச்சுவை மற்றும் திரில்லர் பாணியைக் கலக்கும்போது அந்தப் படைப்புகள் விரிவான ரசிக வட்டத்தை எட்டுவதும் நடக்கும். அந்த முயற்சியின் வரிசையில் ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வலைத்தொடர் ‘டிஸ்னி + ஹாட்ஸ்டார்’ தளத்தில் கடந்த வாரம் வெளியாகியிருக்கிறது.

நேரடி ஒளிபரப்பில் திகில்

காஜல் அகர்வால் தலைமையிலான கல்லூரி காலத்து நண்பர்கள் குழு ஒன்று, அமானுஷ்யங்களை மையமாகக் கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொடரை வழங்கிவருகிறது. டி.ஆர்.பி உச்சத்தில் இருக்கும் அந்த நிகழ்ச்சி திடீரென சர்ச்சைக்குள்ளாகி சரிவும் காண்கிறது. இதனால் அதேமாதிரி அமானுஷ்யத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றுமொரு நிகழ்ச்சியை உடனடியாக உருவாக்கி தங்கள் இருப்பைத் தக்கவைக்கும் நெருக்கடிக்கு ஆளாகிறது அக்குழு. அதற்கான தேடலில், வீடு ஒன்றில் பேய் நடமாட்டம் இருப்பதாகத் தகவலறிந்து அங்கே செல்கிறார்கள்.

x