பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களைத் தொடர்ந்து பதிவிட்டுவருகிறார். அதில், தனது முதல் திரைப்பட அனுபவம் குறித்துக் கூறும்போது நடிகர் விஜயின் பணிவு, தன்னடக்கம் பற்றி புகழ்ந்திருக்கிறார். “விஜயின் பணிவும் ரசிகர்களுக்கும் அவருக்கும் இடையேயான உறவும் என்னை மிகவும் கவர்ந்தன. நியூயார்க் நகரத்தில் படப்பிடிப்பு முடித்துவிட்டுக் கிளம்பும்போது ரசிகர்கள் என்னை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க சம்மதம் கேட்டார்கள். அப்போது விஜய் அவ்வளவு பொறுமை காத்தார். அந்தச் சம்பவத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, நான் இப்போதும் பின்பற்றி வருகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார் பிரியங்கா.
சின்ன வாத்தியாருங்க அவரு...
ஆர்வக் கோளாறு காரணமாக பாடகி அவதாரம் எடுக்கும் கதாநாயகிகள் பலர். விதிவிலக்காக, உண்மையாகவே பாடும் திறமைகொண்ட கதாநாயகிகளும் இருக்கிறார்கள். அப்படி, ஒருவர் கீர்த்தி சுரேஷ். சிறுவயது முதலே வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டு, நல்ல பாடும் திறமை கொண்ட அவர், ‘ரங்தே’ என்ற தெலுங்குப் படத்தில் தேவி பிரசாத்தின் இசையில் ஒரு பாடலை அட்டகாசமாகப் பாடியிருக்கிறாராம்.
இந்தக் கிளி தமிழிலும் பாடுமா?