பகத்பாரதி
readers@kamadenu.in
“இந்தப் புத்தாண்டில் எனது பல வருடக் கனவு நிறைவேறியிருக்கு” என்று பூரிக்கிறார் சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `காற்றுக்கென்ன வேலி' தொடரிலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பூவே உனக்காக' தொடரிலும் நடித்து வரும் ஸ்ரீதேவியிடம் பேசியதிலிருந்து...
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு அப்படி என்ன ஸ்பெஷல்?
சொந்த வீடு வாங்கணுங்கிறது என்னுடைய 12 வருட கனவு. ஒவ்வொரு தடவை வீடு வாங்கணும்னு நினைக்கும் போதெல்லாம் நம்மால முடியுமாங்கிற பயத்திலேயே வீடு வாங்கும் ஆசையை கைவிட்டுட்டேன். இப்போ என் கணவருடைய ஆதரவோடு என்னுடைய நீண்டநாள் ஆசை நிறைவேறியிருக்கு. அதே மாதிரி இந்த வருஷத்திலேயே எங்க குட்டி பாப்பாவும் பிறக்கணும்னு ஆசைப்படுறேன். அதுவும் நடந்துட்டா இந்தப் புத்தாண்டு எங்களுக்கு இன்னும் கூடுதல் ஸ்பெஷல்.