விஜய் சேதுபதி சொல்லித்தந்த பாடம்- தான்யா ரவிச்சந்திரன் பளிச்


ரசிகா
readers@kamadenu.in

சசிகுமாருடன் ‘பலே வெள்ளையத்தேவா’, அருள் நிதியுடன் ‘பிருந்தாவனம்’ என்று ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், விஜய் சேதுபதியுடன் ‘கருப்பன்’ படத்தில் நடித்த பிறகு தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் தான்யா ரவிச்சந்திரன். முதுபெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி. கைவசம் ஐந்து தமிழ்ப் படங்களை வைத்திருக்கும் தான்யா, தற்போது தெலுங்கிலும் அடி
யெடுத்து வைக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதி இங்கே...

நீங்கள் நடிக்கும் ‘இறக்கை முளைத்தேன்’ பெண் மையத் திரைப்படமா?

ஆமாம். இத்தனை சீக்கிரம் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததில் எனக்கே ஆச்சரியம்தான்! இப்படத்தின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இதற்கு முன் இயக்கிய மூன்று படங்களுமே ஹீரோயிஸக் கதைகள்தான். எனவே, “என்னை வைத்து இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டுமா?” என்று அவரிடம் கேட்டேன். அதற்கு, “இந்தக் கதையை இயக்குவது மட்டுமல்ல; நானே தயாரிக்கவும் போகிறேன் என்றால், கதை மீது எனக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கும் என்று பாருங்கள். தவிர என்னால் கிராமத்துக் கதைகளைத்தான் இயக்க முடியும் என்பதையும் மாற்றிக்காட்ட விரும்புகிறேன். அதற்காகத்தான் முழுவதும் நகரத்தில் நடக்கும் கதையாக இதை எழுதினேன். கதையைக் கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள்” என்றார்.

x