தஞ்சாவூரைக் கதைக் களமாகக் கொண்டு உருவாகி இருக்கும் ‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’ படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ‘கயல்’ ஆனந்தி சினிமா இணை இயக்குநர் சாக்ரடீஸ் என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார். திருமணத்துக்குப் பின் படங்கள் குவியத் தொடங்கியிருக்கிறதாம்.
சமந்தாவுக்கு நடந்தது போலவே ரிவர்ஸ் சென்டிமென்ட் போல...
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்து ‘கூழாங்கல்’ என்கிற சுயாதீன திரைப்படத்தை வாங்கியிருக்கிறார்கள். அந்தப் படம் உலகப் புகழ்பெற்ற ரோட்டர்டாம் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் பிரிமியராக திரையிடப்பட்டது. அதில், நயன்தாரா பட்டுப் புடவையிலும் விக்னேஷ் சிவன் பட்டு வேட்டி சட்டையிலும் கல்யாண ஜோடிபோல் தோன்றி படக்குழுவினருடன் புகைப்படத்துக்கு போஸ்கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.
கல்யாணம் எப்பன்னு கேட்டா மட்டும் அவங்களுக்குக் காது கேட்காது..!