சினிமா பிட்ஸ்


‘பிருத்விராஜ்’ ஜோடியாக நடித்த ‘ஆடு ஜீவிதம்’ மலையாளப் படம் பாதியில் நின்றாலும், இணையத்தில் பரபரப்பாக இருக்கிறார் அமலாபால். ஏற்கெனவே ஆண் நண்பர்களுடன் அரைகுறை ஆடைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து நெட்டிசன்களின் கண்டனத்துக்கும், பொறாமைக்கும் ஆளானவர், இப்போது அந்த அவப்பெயரைப் போக்கும்விதமாக உயிர்நேயம் பாராட்ட ஆரம்பித்திருக்கிறார். தனது வீட்டில் குட்டி போட்டுள்ள பூனைக் குட்டிகளை தூக்கிக்கொண்டு இவர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகியிருக்கின்றன.

நீங்க தயாரிக்கிறதா சொன்னா ‘கேடாவேர்’ எப்ப ரிலீஸ் ஆகும் அமல்ஸ்?

சிம்புவை வைத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் ‘மாநாடு’ படத்தைத் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருவது தெரிந்ததே. பெண் காவலர்களின் பணிநேர அவஸ்தைகளை சொல்லும் ‘மிக மிக அவசரம்’ படத்தை இயக்கி பெயரெடுத்த காமாட்சி, அதே உற்சாகத்தில் இன்னொரு படத்தை இயக்கத் தயாராகிவிட்டார். எழுத்தாளர் ம.காமுத்துரை என்கிற தேனியின் ‘முற்றாத இரவொன்றில்’ நாவலின் உரிமையைப் பெற்று இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார் சுரேஷ் காமாட்சி.

அடிச்சித் தூக்குங்க சு.கா...

x