மஹா
readers@kamadenu.in
தொகுப்பாளினி பூஜிதா, சன் டிவியின் ‘வணக்கம் தமிழா’ நிகழ்ச்சி மூலம் வெளிச்சம் பெற்று வரும் இவருக்கு இப்போது சினிமா, வெப் சீரீஸ் வாய்ப்புகளும் குவியத் தொடங்கியுள்ளன. ‘‘வணக்கம் தமிழா’ நிகழ்ச்சி வழியே புத்தம் புதிய காலைப் பொழுதை பார்வையாளர்களுக்கு இனிமையாக்கிக் கொடுக்கும் சுகமே தனிதான்!’’ என அழகாக பேசத் தொடங்கிய பூஜிதாவுடன் காமதேனுவுக்காக உரையாடினோம்.
சன் டிவியின் ஒவ்வொரு தொகுப்பாளினிக்கும் முத்திரை நிகழ்ச்சியாக அமைந்து வரும் ‘வணக்கம் தமிழா’ உங்களுக்கு எப்படி?
பொதுவா ஒரு நிகழ்ச்சின்னா சினிமா, சமையல்னு ஒரு துறை சார்ந்ததாக அமையும். இந்த ஷோவுல மருத்துவம், சினிமா, விளையாட்டு, நடனம், இசை என பல துறைகள் கலந்து அலசுவோம். ஒவ்வொரு நாளையும் இனிமையாக தொடங்கிவைக்கணும் என்கிற எண்ணத்தோடு இந்த நிகழ்ச்சியை வழங்கி வருகிறோம்.