ரசிகா
readers@kamadenu.in
எந்த மாதிரியான கதாபாத்திரம் என்றாலும் அதற்குள் நச்சென்று தன்னைப் பொருத்திக்கொள்ளும் திறன் படைத்தவர் நந்திதா. ‘அட்டகத்தி’, ‘எதிர்நீச்சல்’, ‘முண்டாசுப்பட்டி’ என ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டிய நந்திதா, தற்போது தனது பெயருடன் ‘ஸ்வேதா’ என்ற பின்னொட்டையும் இணைத்துக்கொண்டிருக்கிறார். பொங்கலுக்கு வெளியான, ‘ஈஸ்வரன்’ படத்தில் சில காட்சிகளே வந்தாலும் தனது இருப்பைக் காட்டிவிட்ட நந்திதாவை, ‘கபடதாரி’ இசை வெளியீட்டு விழாவில் சந்தித்துப் பேசினேன்.
சமீபகாலமாகத் தமிழில் உங்களைப் பார்க்க முடியவில்லையே?
கன்னடம், தமிழ், தெலுங்கு எல்லாம் சேர்த்து இதுவரை 31 படங்களில் நடித்திருக்கிறேன். தெலுங்கில் வாய்ப்பு அமையும்போதே நடித்துவிட வேண்டும் என்பதால், கடந்த இரண்டு வருடங்களாகத் தலா 3 டோலிவுட் படங்களில் நடித்தேன். என்றாலும் தமிழில் ‘டச்’ விட்டுவிடக் கூடாது என்பதற்காக ‘தேவி 2’, ‘டாணா’ ஆகிய படங்களை ஒப்புக்கொண்டேன். இந்த ஆண்டில் முதல் கணக்கு ‘ஈஸ்வரன்’. கன்னடப் படமான ‘கபடதா’ரியின் தமிழ், தெலுங்கு ரீமேக்குகளில் கடந்த ஆண்டே நடித்து முடித்துவிட்டேன். கரோனா காரணமாக புரமோஷன் வேலைகளைத் தாமதமாகத் தொடங்கியிருக்கிறார்கள்.