சினிமா பிட்ஸ்


‘கேங்க் லீடர்’ தெலுங்குப் படத்தில் நானியின் ஜோடியாக நடித்தவர் பிரியங்கா மோகன். அடுத்து தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘டாக்டர்’ படத்தின் மூலம் அறிமுகமாகிறார். மே மாதம் படம் வெளியாகவிருக்கும் நிலையில், ‘டாக்டர்’ படத்தின் சில காட்சிகளைப் பார்த்த இயக்குநர் பாண்டிராஜ், சூர்யா நடிக்கும் தனது புதிய படத்துக்கு ப்ரியங்கா மோகனைக் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துவிட்டார்!

மஞ்சள் முகமே வருக...

முதல் முறையாக அப்பாவுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஸ்ருதி ஹாசன். ‘அறுவை சிகிச்சைக்குப்பின் அப்பா நலமாக இருக்கிறார். இன்னும் நான்கு நாட்களில் வீடு திரும்பிவிடுவார். சிறு ஓய்வுக்குப்பின் மீண்டும் மக்களைச் சந்திக்க வருவார்’ என்று அதில் குறிப்பிட்டிருக்கும் ஸ்ருதி, அப்பாவுக்கு ஆதரவாக அரசியல் களத்தில் குதிக்கக்கூடும் என்று ஆருடம் சொல்கிறார்கள். பொங்கலுக்கு வெளியான தெலுங்குப் படமான ‘கிராக்’கில் ரவிதேஜா ஜோடியாக 5 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

இன்னொரு கனிமொழியா?

x