பிட்லீ
readers@kamadenu.in
‘நடிகையர் திலகம்’ படத்துக்குப் பின், பெண் மையப் படங்களிலேயே அதிகம் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு, பெயர் சொல்லும் வகையில் எந்தப் படமும் அமையவில்லை. வெறுத்துப்போன அவர் இனி பெண் மையப் படங்கள் வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டாராம். தற்போது செல்வராகவனுடன் ‘சாணிக் காயிதம்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் கீர்த்தி, ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடர்வதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார். இதற்கிடையே ‘மாஸ்டர்’ படத்தைத் திரையரங்கில் பார்த்துவிட்டு ‘இது மாஸ்டர் பொங்கல் டா..!’ என்று ட்விட்டியிருக்கிறார் கீர்த்தி!
கேட்டுச்சா தளபதி... இன்னொரு வாய்ப்புக் குடுங்க...
தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீஸர், ‘நாம் தமிழர்’ கட்சியினரைக் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. விஜய் சேதுபதி நடிக்கும் ‘ராசிமான்’ என்ற கதாபாத்திரம் சீமானைக் கிண்டல் செய்வதுபோல் இருப்பதாக அவர்கள் கொந்தளிக்கிறார்கள். அந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் பார்த்திபன் பதறிப்போய் சமரச முயற்சியில் இறங்கியிருக்கிறார்!