ஒரு சக நடிகையிடமிருந்து கிடைத்த அங்கீகாரம்..!- ராஷி கண்ணா பரவசம்


ரசிகா
readers@kamadenu.in

குறுகிய கால இடைவெளியில் கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் நடிகை ராஷி கண்ணா. டெல்லியில் பிறந்து வளர்ந்த ராஷி, தெலுங்கு, தமிழ் கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டவர். ‘ப்ராம்ப்டிங்’ இல்லாமல் வசனம் பேச ராஷி காட்டும் முனைப்பு, இயக்குநர்கள் மத்தியிலும் நற்பெயரை வாங்கித் தந்திருக்கிறது. தான் நடிக்கும் படங்களில் தனக்கான பாடல்களைப் பாடும் தாரகையாகவும் தடம் பதித்திருக்கிறார். தெலுங்குப் படங்களில் நடித்துக்கொண்டே தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’, ஆர்யாவுடன் ‘அரண்மணை 3’, ஜீவாவுடன் ‘மேதாவி’ என பிஸியாக இருக்கிறார். காமதேனு மின்னிதழுக்காக அவரிடம் ஒரு கலர்ஃபுல் பேட்டி:

‘ராஷி’ என்கிற உங்கள் பெயருக்கு என்ன அர்த்தம்?

 ராஷி என்றால் ‘அதிர்ஷ்டம்’ என்று இங்கு சொல்கிறார்கள். ஆனால், வட இந்தியாவில் ராஷி என்றால் ‘லட்சுமி’ என்று அர்த்தம். நான் கடவுள் லட்சுமியைப் போல் அழகானவள், செல்வத்தைக் கொண்டுவந்தவள் என்று அப்பாவும் அம்மாவும் சொல்லிக்கொண்டே யிருக்கிறார்கள். அதனால் எனக்கு இந்தப் பெயரை வைத்தார்களாம். எனது பெயரை மாற்றலாமா என்று டோலிவுட்டில் கேட்டபோது மறுத்துவிட்டேன். அப்பா, அம்மாவுக்கு நான் என்றைக்கும் ராஷியாகவே இருக்க வேண்டும்.

x