மஹா
readers@kamadenu.in
மக்களின் மனம் கவர்ந்த நட்சத்திரங்கள் மறையும்போது ஏற்படும் இருள் எப்போதும் அடர்த்தியானது. ‘மன அழுத்தமா, பிறரின் தூண்டுதலா?’ எனத் தொடங்கி ‘தற்கொலையா, கொலையா?’ என்பதுவரை எண்ணற்ற கேள்விகள் உலவும் மர்ம இருள் அது.
அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் சித்ராவின் மறைவு, பல்வேறு ஊகங்களுக்கும் வழிவகுத்துவிட்டது. இப்படி நடக்கும் மரணங்களுக்கு என்ன காரணம், இப்படியான சூழலுக்கு கலைஞர்களைத் தள்ளிவிடும் காரணிகள் என்ன, தவிர்த்துக்கொள்ள என்ன வழி எனப் பல்வேறு கேள்விகளுடன் சில சின்னத்திரை கலைஞர்களிடம் பேசினோம்.
‘‘நடிகர், நடிகைகளுக்கு ஷூட்டிங் வேலை மட்டுமே மன அழுத்தத்தைக் கொடுக்கிறது எனச் சொல்லிவிட முடியாது” என்று பேச ஆரம்பித்தார் இயக்குநர் பிரவீன் பென்னெட். விஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா’, ‘ராஜா ராணி 2’ ஆகிய தொடர்களை இயக்கிவருபவர் இவர்.