சினிமா எடுக்கக் கற்றுக்கொண்டேன்!- ‘அற்புத கேமரா’ அனுபவம் சொல்லும் ஆனந்தி


மகராசன் மோகன்
mohan.m@hindutamil.co.in

வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான ‘பொறியாளன்’ (2014) படத்தின் மூலம் தமிழ்கூறும் நல்லுலகுக்கு அறிமுகமான ஆனந்தி, ‘கயல்’, ‘சண்டிவீரன்’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான ரசிகர்களைத் தக்கவைத்துக்கொண்டவர். கரோனா காலத்தில் ரசிகர்களின் கண்ணில் படாமல் இருந்தவர், இப்போது தமிழ், தெலுங்கு என மீண்டும் களம் காண்கிறார். புத்தாண்டுப் புன்னகையுடன் பேசிய ஆனந்தியுடன் ஒரு பேட்டி:
    
இதுவரை நீங்கள் நடித்த தமிழ்ப் படங்களில் ‘கமலி from நடுக்காவேரி’ படத்தைத்தான் மனதுக்கு நெருக்கமான படம் என்றீர்களாமே?

ஒவ்வொரு கதையையும் விரும்பித்தான் ஏற்றுக்கொள்கிறோம். ஆனாலும், சில படங்கள் நம் மனதுக்கு ரொம்பவும் நெருக்கமாகிவிடும்தானே! ‘கமலி from நடுக்காவேரி’ அப்படியான ஒரு படம்தான்.

‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்களுக்குப் பிறகு பல படங்களுக்கான கதை கேட்டேன். ஆனால், எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. அந்தச் சூழலில் என்னைத் தேடி வந்த கதை இது. புதிய குழு என்றதும் சற்று தயக்கத்துடனே கதை கேட்க ஆரம்பித்தேன். கதை கேட்டு முடிக்கும்போது, ‘எந்தக் காரணத்துக்காகவும் இந்தப் படத்தை விட்டுவிடக் கூடாது’ என உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டேன்.

x