ரசிகா
readers@kamadenu.in
‘சூரரைப் போற்று’ அபர்ணா பாலமுரளி என்று சொன்னால் ரசிகர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள். அந்த அளவுக்கு இப்படத்தின் நாயகி பாத்திரமான பொம்மியாகவே அவர்களின் மனதில் ஆழப் பதிந்துவிட்டவர் அபர்ணா.
‘8 தோட்டாக்கள்’, ‘சர்வம் தாள மயம்’ ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த இவர், ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ எனும் மலையாளப் படத்திலேயே இங்குள்ள ரசிகர்களை ஈர்த்தவர்தான். எல்லாவற்றையும்விட, ‘சூரரைப் போற்று’ பொம்மி பாத்திரம்தான் இவரது புதிய அடையாளமாக மாறியிருக்கிறது. இயல்பாக, வெளிப்படையாகப் பேசும் அபர்ணாவுடன் ஒரு பேட்டி:
ஒரே படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானதன் ரகசியம் என்ன?
இந்தப் பெருமை முழுவதும் இயக்குநர் சுதா கொங்காராவுக்குத்தான் போய்ச்சேர வேண்டும். இயல்பான நடிப்பை என்னிடமிருந்து வெளிக்கொண்டு வந்தவர் அவர்தானே! கதாபாத்திரமாகவே என்னால் மாறமுடியும் என்று அவர் தந்த ஊக்கம்தான் எனக்கு உற்சாகம் தந்தது.