சினிமா பிட்ஸ்


பிட்லீ
readers@kamadenu.in

பார்வையற்ற பெண்ணாக நயன்தாரா நடித்திருக்கும் ‘நெற்றிக்கண்’ ஏக எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டிருக்கிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சைக்கோ வில்லனையும், அவனது டீமையும் தனது வளர்ப்பு நாயின் உதவியுடன் வேட்டையாடும் கதாபாத்திரம் நயன்தாராவுக்கு. படத்தின் டீஸர் ஏற்கெனவே ‘ஹிட்’. இப்போது, படப்பிடிப்பின்போது வளர்ப்பு நாயைப் பிடித்தபடி நடந்துசெல்லும் நயனின் புகைப்படமும் வைரலாகியிருக்கிறது.

புத்தாண்டிலும் ஜொலிக்க வாழ்த்துகள்...

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனாக பாபி சிம்ஹா நடிக்கும் ‘சீறும் புலி’ திரைப்படம், நிதி நெருக்கடியால் பாதியில் நிற்கிறது. இதனால் சற்று சோர்ந்துபோயிருக்கும் பாபி சிம்ஹா, ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் நடிக்கும் ‘வசந்த முல்லை’ படம் கைகொடுக்கும் என்று காத்திருக்கிறார். ‘ஜிகர்தண்டா’ படம் போல இப்படமும் ஹிட் அடிக்க வேண்டும் என்பது பாபியின் கனவு!

x