மஹா
readers@kamadenu.in
‘‘தமிழில் சீரியல் நடிப்பு பக்காவா செட் ஆகிடுச்சு. அதுவே, கன்னடத்தில் சீரியல் நடிப்பு, நிகழ்ச்சி தொகுப்பாளினின்னு இரண்டிலும் சவாரி செய்றேன். கன்னடம் தாய்மொழிங்கறதால சரளமா பேசி அசத்தலாமே!’’ என்கிறார், ஜீ தமிழ் சேனலில் 700 அத்தியாயங்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ மெகாத்தொடரின் வில்லி சுவாதி.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இங்கும், அங்கும் ஓடிக்கொண்டிருக்காமல் கன்னடத்தில் நடித்து வந்த ‘நாகினி 2’ தொடர் நடிப்புக்கு பிரேக் அளித்துவிட்டார். முழு நேரம் தமிழில் ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ தொடரில் சுவாதி நடித்து வருகிறார். அவருடன் பேசியதிலிருந்து...
சீரியலுக்கு ஒரு வில்லி போதாதா. துணைக்கு இன்னொருவரை அழைத்துக் கொண்டீர்களே..?