ரசிகா
readers@kamadenu.in
பாலாஜி மோகனின் ‘காதலில் சொதப்புவது எப்படி?’ படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். குறுகிய காலத்திலேயே தமிழ், மலையாளம், கன்னடம் என ஒரு ரவுண்டு வந்துவிட்டார். தமிழில் ‘தமிழ் படம்-2’, ‘நான் சிரித்தால்’ என அடுத்தடுத்த படங்களில் அசத்தியவர், தற்போது அசோக் செல்வனுடன் ‘வேழம்’ படத்தில் நடித்திருக்கிறார். ‘காமதேனு’வுக்காக அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இது:
‘வேழம்’ படத்தில் உங்களுக்கு என்ன கதாபாத்திரம்?
இது ஒரு ரொமான்டிக் த்ரில்லர். முழுப் படமும் ஊட்டியில ஷூட் பண்ணினோம். இயற்கை அழகுள்ள இடங்கள்ல நடிச்சது ஜாலியான அனுபவம். படத்துல என்னோட கேரக்டர் பேரு லீனா. சவாலான கேரக்டர்தான். ரசிச்சு நடிச்சிருக்கேன். அசோக் செல்வன், இயக்குநர் சந்தீப் இரண்டு பேருமே என்னோட நடிப்பைப் பாராட்டினாங்க.