சினி பிட்ஸ்


பிட்லீ
readers@kamadenu.in

காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், வேதிகா ஆகியோரைத் தொடர்ந்து ஹன்சிகா மோத்வானியும் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். தென்னிந்திய நட்சத்திரங்களை இலவசமாக விமானத்தில் அழைத்துச் சென்று, பத்து நாள் தங்கவைத்து, உபசரித்து அனுப்புகிறது அந்நாட்டு அரசு. அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டும் என்பது மட்டும்தான் ஒரே நிபந்தனை. அதை சின்சியராகவே செய்திருக்கிறார் ஹன்சிகா!

பொறந்தாலும் ஆம்பளையா... பொறக்கக் கூடாது...

‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையான கெட்-அப்பில் கமல் அசத்தியிருப்பார். அவரது தீவிர ரசிகரான ஹரிஷ் கல்யாண், இயக்குநர் இளன் இயக்கத்தில் நடித்துவரும் ‘ஸ்டார்’ படத்தில் அதே கெட்-அப்பில் சில காட்சிகளில் வருகிறாராம். “கமல் நடத்திய திரைக்கதைப் பயிற்சி வகுப்புகளில் பாடம் படித்த நன்றிக் கடனுக்காக இதை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்” என்கிறார் ஹரிஷ்.

x