மஹா
readers@kamadenu.in
சின்னத்திரை உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது. புன்னகையும் பூரிப்பும் உற்சாகமுமாக வலம் வந்த நடிகை சித்ராவின் மரணம், சீரியல் பார்க்காத ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை... எங்க வீட்டுப் பிள்ளை’ என்று தாய்மார்களால் கொண்டாடப்பட்ட சித்ரா, இன்று உயிருடன் இல்லை. சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி நெடுந்தொடர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்தவர், விடுதியிலேயே சடலமாக மீட்கப்பட்டது பெரும் துயரம்!
பன்முகத் திறன் கொண்டவர்