எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
கரோனா பொதுமுடக்கத்தின் காரணமாகத் திரையரங்குகள் கதவடைத்துவிட்ட சூழலில், அங்கு வெளியாக வேண்டிய திரைப்படங்கள் ஒருவழியாக ஓ.டி.டி தளங்களில் கரையேறியிருக்கின்றன.
பெருந்தொற்று காலத்தில் சாத்தியமாகியிருக்கும் ஆக்கபூர்வ அம்சங்களில் ஒன்று இது. இன்றைக்கு ‘அமேசான் பிரைம் வீடியோ’, ‘நெட்ஃபிளிக்ஸ்’, ‘டிஸ்னி+ஹாட்ஸ்டார்’ உள்ளிட்ட ஓ.டி.டி தளங்களுக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் இதுவரை இல்லாத வரவேற்பு கிட்டியிருக்கிறது. வீட்டு வரவேற்பறையிலேயே வெளியான இந்தத் திரைப்படங்கள், மாதக் கணக்கில் முடங்கிக் கிடந்த மக்களுக்குப் பெரும் ஆறுதலைத் தந்தன.
வலைத்தொடர்கள், பிரத்யேகத் திரைப்படங்கள், ஆவணப் படங்கள் ஆகியவையே ஓ.டி.டி தளங்களின் கவன ஈர்ப்பாக இருப்பவை. இவற்றுடன் திரையரங்கில் வெளியான திரைப்படங்களும், செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளைப் போலவே ஓ.டி.டி-யிலும் வெளியாவதுண்டு. ஒருகட்டத்தில் நேரடித் திரைப்படங்களே இணைய மேடைகளை அலங்கரித்தன. பல்வேறு மொழிகள், பற்பல ரகங்கள் என வெளியான திரைப்படங்களில் எதைப் பார்ப்பது, எதைத் தவிர்ப்பது என ரசிகர்கள் தடுமாறிப்போனார்கள் எனலாம். எனவேதான், திரைப்படங்களைப் போலவே அவை தொடர்பான விமர்சனங்களுக்கும் மக்கள் காத்திருக்கிறார்கள்.