சினி பிட்ஸ்


எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘லாபம்’. படத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியதும், பெரிய படங்கள் எல்லாம் தொடர்ந்து இப்படி ஓடிடி-யில் வந்தால், திரையரங்கங்கள் என்னாவது என்று பேச்சுகள் எழுந்தன. ‘திரையரங்கில் வெளியான பிறகே இப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும்’ என்று ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

நல்லது செஞ்சாலும் இங்க கொஞ்சம் பேரு திட்டுவாங்களே?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘கர்ணன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் கேரளப் பெண்குட்டி ரெஜிஷா விஜயன். மலையாளத்தில் ஸ்போர்ட்ஸ் ட்ராமா படங்களில் நடித்த ரெஜிஷா, ‘கர்ணன்’ படத்தில் தனது மாடர்ன் கேர்ள் தோற்றத்தை அடியோடு மாற்றிவிட்டதாகச் சொல்கிறார் இயக்குநர்.

இரண்டாம் நயன்தாராவே வருக...

x