கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
“சாராய ஆலைகள் நடத்தாத, சொத்துகளை வாங்கிக் குவிக்காத, தன் வாரிசுகளைத் தமிழ் மக்கள் மீது திணிக்காத, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தாத, ஆர்ப்பாட்டமில்லாத அருமையான அரசியல் தலைவர் பேராசிரியர் அன்பழகன்...” - சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் திமுகவைத் திட்டுவதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கும் ஒருவர், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு எழுதியிருந்த இரங்கல் செய்தி இது. இந்த அஞ்சலிக் குறிப்பிலேயே திமுகவின் இதர தலைவர்களைச் சாடும் வார்த்தைகள் இருந்தாலும், இதன் ஒவ்வொரு வரிக்கும் பொருத்தமானவர்தான் அன்பழகன்.
“பொதுவாழ்வில் ஈடுபடுவோர் தம் கடமையை மறந்தால் என்ன பயன்... அவர்தம் பேச்சும் எழுத்தும், கண்ணியம் தவறினால் விளைவு யாது... ஓர் அமைப்பு கட்டுப்பாட்டுடன் செயற்படாவிட்டால் நன்மை ஏது?" என்று கேட்ட அன்பழகன் கழகத்தின் ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' எனும் கோட்பாட்டைக் கடைசிவரையில் கடைப்பிடித்தவர். அந்த வார்த்தைகளுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர்.
கறாரான தலைவர்