இது ஒரு வித்தியாசமான கொள்ளைக் கதை!- ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ இயக்குநர் சுனிஷ் குமார்


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

“இங்கிலீஷ் எல்லாம் வேணாம்… தமிழிலேயே கேள்விகளைக் கேளுங்க. எனக்கு நல்லா தமிழ் வரும். ராஜீவ் மேனன் சார் கிட்ட உதவியாளரா பல தமிழ்ப் படங்களில் வேலை பார்த்திருக்கேன்” என்று மலையாள உச்சரிப்பு கலந்த தமிழில் வரவேற்கிறார் அறிமுக இயக்குநர் சுனீஷ் குமார். மலையாளம் மற்றும் தமிழில் பரத்தை வைத்து அவர் இயக்கும் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ படம் பற்றிய தகவல்கள் சுவாரசியம் தருகின்றன. அவருடன் ஒரு பேட்டி:

முதல் படமே இரண்டு மொழிகளில். என்ன ஸ்பெஷல்?

இது முழுக்க முழுக்க மர்மங்கள் நிறைந்த ஆக் ஷன் த்ரில்லர் படம். இப்போ இந்தியா முழுக்க த்ரில்லர் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி பண்ணும் வகையில் இந்தப் படம் இருக்கும். படத்தில் பல சஸ்பென்ஸ் சமாச்சாரங்கள் இருக்கு. கடைசிக் காட்சி வரை ரசிகர்கள் கணிக்க முடியாத வகையில் திரைக்கதையை உருவாக்கியிருக்கோம். ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான விருந்தா இருக்கும்!

x