க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in
“நம்முடைய அடையாளமே குடும்பம்தான். ஆனால், ஊரில் இருக்கும் அம்மாவிடம் போனில்கூட பேச முடியாத அளவுக்கு அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம். யோசித்துப் பார்த்தால் அர்த்தமே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பது புரியும். அதையெல்லாம் ‘ராஜவம்சம்’ படத்தில் பேசியிருக்கிறேன்” என்கிறார் அறிமுக இயக்குநர் கே.வி.கதிர்வேலு.
சசிகுமார், நிக்கி கல்ராணி, விஜயகுமார், ராதாரவி, தம்பி ராமையா, சதீஷ், யோகிபாபு, நிரோஷா என்று பெரிய நடிகர் பட்டாளமே சேர்ந்திருக்கும் இப்படத்தைப் பற்றிப் பேச கதிர்வேலுவைச் சந்தித்தேன். அவரது பேட்டி:
முதல் படத்திலேயே நாப்பதுக்கும் மேற்பட்ட நடிகர்கள் பட்டாளத்தை வைத்துப் படமெடுப்பது சவாலாக இருந்திருக்குமே?